கோவில் அன்னதானத்தில் சாம்பார் கேட்ட வாலிபர் மீது தாக்குதல்
வழக்கு
சாம்பார் கேட்ட வாலிபர் மீது தாக்குதல் - 5 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்ஞாம் புறம், இடைத்தெங்கு என்ற பகுதியை சேர்ந்தவர் விஜின் (27). இவர் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் மதியம் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் சாப்பிட்ட சென்றார். சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது, பரிமாறுபவர்களிடம் சாம்பார் அதிகம் கேட்டாராம். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் அதே பகுதி மாம்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்த விக்கி (19) அஜய் ( 21), ராஜ் (48) பாலகிருஷ்ணன், சமத்துவபுரத்தை சேர்ந்த பிரசாத் (38) ஆகியோர் சேர்ந்து விஜினை பந்தியில் இருந்து இழுத்து வெளியே கொண்டு சென்று தாக்கி உள்ளனர்.பின்னர் விஜின் தலையில் விக்கி கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விஜின் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் சம்மந்தபட்ட 5 பேர் மீதும் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story