குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் இடபிரச்சனையில் தாக்குதல்: புகார்

குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் இடபிரச்சனையில் தாக்குதல்:  புகார்
காவல் நிலையம் 
விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் அருண்குமார் என்பவரை தாக்கியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே குரு மூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் அருண்குமார். இவர் வீட்டிற்கு அருகே சுந்தரராஜன் மற்றும் சரோஜினி குழாய் கம்பெனி என்ற இருவருக்கும் சொந்தமான இடம் இருப்பதாகவும் அந்த இடத்தை விஏஓ சர்வேயர் கலந்து கொண்டு இருந்தபோது, அப்பொழுது அங்கு இருந்தவர்கள் பொது பாதையை மறைத்து கல்லை ஊண்டியதாக கூறப்படுகிறது.

அங்கு இருந்த அருண்குமார் என் புதுப்பாதையை மறைக்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை நவநீதகிருஷ்ணன் சுந்தர்ராஜன் வரலட்சுமி ஆகியோர் தாக்கியதாகவும், அங்கு இருந்த வரலட்சுமி என்பவர் தான் நீதிமன்ற ஊழியர் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி மிரட்டியதாகவும்,

இதனால் காயம் அடைந்தவர். விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அடிப்படையில் ஆமத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story