குத்தகைக்கு நிலம் கொடுக்காததால் மண்வெட்டியால் தாக்குதல்
காவல்துறை விசாரணை
வெங்கஞ்சி ஏலா பகுதியில் நிலத்தை குத்தகைக்கு கொடுக்க மறுத்தவர் மீது மண் வெட்டியால் தாக்குதல். போலீஸ் வழக்கு பதிவு.
கன்னியாகுமரி மத்தம்பாலை பகுதியை சேர்ந்தவர் சைலஸ். அவரது மகனுக்கு சொந்தமான நிலம் கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி ஏலா பகுதியில் உள்ளது. அதில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். பக்கத்து நிலத்தை களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்த பாலஸ் என்பவர் குத்த கைக்கு எடுத்து வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைலஸ் மகனின் நிலத்தை, பாலஸ்குத் தகைக்கு கேட்டுள்ளார்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று மதியம் விவசாய பணிகள் முடிந்து சைலஸ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பாலஸ் தான் வைத் திருந்த மண்வெட்டியால் சைலஸை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சைலஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீ சார் பாலஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story