மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

காவல் நிலையம் 

சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான 630 சதுரடி காலி நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு காலி நிலத்தை சுற்றி முள்வேலி போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து முள்வேலியை அகற்றி ஆக்கி்ரமிக்க முயன்றனர். இது குறித்து கொண்டலாம்பட்டி மண்டல செயற்பொறியாளர் செந்தில்குமார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story