வன விலங்குகளை வேட்டையாட முயற்சி : 7 பேருக்கு அபராதம்

வன விலங்குகளை வேட்டையாட முயற்சி : 7 பேருக்கு அபராதம்
X

கோப்பு படம் 

வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 7 பேருக்கு ரு. 5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட வன உயிரினக் காப்பாளா் முருகன் உத்தரவின்பேரில், சிவகிரி வனச் சரகா் மௌனிகா தலைமையில், சிவகிரி வடக்குப் பிரிவு வனவா் அசோக்குமாா் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பாலசுப்பிரமணியன் ஆகியோா் சுனைப்பாறை பீட் , வழிவழி சரகத்தில் ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, சிலா் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றனராம். விசாரணையில் அவா்கள் தேவிபட்டணம் முருகன் (49), சொக்கநாதன்புதுாா் சுடலைமாடசாமி (33), ஐயப்பன் (39), மணிகண்டன் (38), கோபால் (51), சிவகாமிநாதன் (46), மாடசாமி (28) எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களுக்கு வனத் துறையினா் ரூ. 5.60 லட்சம் அபராதம் விதித்தனா்.

Tags

Next Story