மேட்டூர் அரசு மருத்துவமனையில் நோயாளியின் மனைவியிடம் நகை திருட முயற்சி
புகார் அளித்த பெண்
மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினத்தை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி அமலதாஸ்(65). இவரது மனைவி மாலதி (48) தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு. அமல்தாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த வெள்ளி அன்று மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஐ.சி.யு, பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உதவியாக மனைவி மாலதி ஐ.சி. யு, அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஐ.சி.யு அறையில் உள்ளே நுழைந்த மர்ம நபர் மாலதி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை பவுன் தங்கத் தாலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை சுதாரித்துக் கொண்ட மாலதி தாலியை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வருவதை கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.