மணலை திருட முயற்சி; பொதுமக்கள் போராட்டம்

மேதராமாதேவியில் கிணற்றில் அத்துமீறி மணலை திருட முயற்சிப்பதால், உறுதுணையாக உள்ள ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முத்துகாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மேதராமாதேவி கிராமத்தின் நடுவே அரசுக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு மிகவும் பாழடைந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு (கணிம வள மணல்) மணலை கொட்டி மூடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேதராமாதேவியில் கிணற்றில் கொட்டப்பட்ட விலை உயர்ந்த மணலை சிலர் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து அள்ள முயற்சி செய்வதாகவும், இதனை தட்டிக்கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். இந்த விலை உயர்ந்த மணலை அள்ளுபவர்களுக்கு ருக்கு உறுதுணையாக முத்துகாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜேஷ் இருந்து வருகின்றார். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துமீறி நுழைந்து அரசின் சொத்தை திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேதரமாதேவி கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர், போராட்டத்தை கைவிட்ட மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் மாதவனிடம் மனு அளித்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story