காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சந்திரசேகரன் இவர் கடந்த மூன்று நாட்கள் முன்பு தேர்தல் காரணமாக மதுபான கடைகள் விடுமுறையில் இருந்த நேரத்தில் கள்ளத்தனமாக சாராய விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்றும் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்ததாக கூறி, குருசிலப்பட்டு போலீசார் சந்திரசேகரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சந்திரசேகரன் சாராயன விற்பனை செய்ததாக இதற்கு முன்பு மூன்று முறை கைது செய்துள்ளனர் இதன் காரணமாக அவர் மீது போலீசார் தரப்பில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த குடும்பத்தினர் சந்திரசேகரன் சாராயம் விற்பனை செய்யவில்லை என கூறியும் மேலும் அவருக்கு வயிற்றில் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர் எனவே அவர் ஒரு நோயாளி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறி திருப்பத்தூர் வழியாக மிட்டூர் செல்லும் சாலை குருசிலப்பட்டு காவல் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அதை தடுத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்திய போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்கவும் குடும்பத்தினர் முயற்சித்தனர். பின்னர் போலீசார் கேனை பிடுங்கி எறிந்து ஒரு சில பட்ட காவல் நிலையம் அழைத்து வந்தனர். இந்த சம்பவம் இந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஸ்டேஷன் பெயிலில் சந்திரசேகரனை போலீசார் விட்டனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.