ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி : ரூ 10 லட்சம் பணம் தப்பியது

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி : ரூ 10 லட்சம் பணம் தப்பியது
எடிஎம் கொள்ளையில் கொள்ளை முயற்சி
தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம்மில் நடந்த கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ 10 லட்சம் பணம் தப்பியது.

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27ம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமி வங்கியின் ஏ.டி.எம் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார். பின்னர் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்ற்த்துடன் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து நேற்று நெல்லையை சேர்ந்த வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் மேனேஜர் ஆசீர் நவீன் (29) என்பவர் வந்து பார்த்தபோது ஏடிஎம் கொள்ளை முயற்சி நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஏடிஎம் உள்ளே ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் மேனேஜர் ஆசீர் நவீன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஏடிஎம் உள்ளே சிசிடி கேமரா உடைக்கப்பட்டு கிடந்ததால் அதில் எதுவும் பதிவாகவில்லை. இதனால் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து கொள்ளையன் யார் என்று தேடி வருகிறார்கள். இது சம்பந்தமாக சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story