நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி உண்ணாவிரத முயற்சி - தள்ளு முள்ளு, கைது

நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி உண்ணாவிரத முயற்சி - தள்ளு முள்ளு,   கைது
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் கைது
இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் யூனியன் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி இராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது காவல் துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் வலுக்கட்டாயமாக 15 பேரை கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிந்த நிலையிலும் சாலைகளை சீரமைக்காமல் சாலைகளில் பெரிய பள்ளமேடுகள் குழிகள் என இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மழை நேரங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சாலையில் பள்ளம் இருப்பது அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் பலமுறை சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்து இன்று அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து ஈடுபட முயன்றனர் காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார் வலுக்கட்டாயமாக 3 பெண்கள் உட்பட 15 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story