வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சிறு மொளசி ஊராட்சி பன்னீர் குத்தி பாளையம் பகுதியில் உள்ளது சிறு மொளசி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், இதில் நேற்று இரவு வழக்கம் போல் இரவு காவலுக்கு பன்னீர் குத்தி பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பணிக்கு வந்தார், இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரது மண்டையில் கட்டையால் தாக்கிவிட்டு கடன் சங்கத்தின் வெளி கதவு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
பின்னர் ஜன்னல் கதவுகளை உடைத்துப் பார்த்துள்ளார் எதையும் திருட முடியாத நிலையில் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு சென்றுவிட்டார், காலை பணி முடிந்து சுந்தரம் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்து அவரது மனைவி மகன் ஆகியோர் கூட்டுறவு கடன் சங்கத்தில் வந்து பார்த்த போது மண்டையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்த நிலையில் சுந்தரம் கிடப்பதை பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து திருச்சங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
மண்டையில் பலத்த காயமடைந்த சுந்தரம் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஊரக போலீசார் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்,கூட்டுறவு சங்கத்திலிருந்து பணமோ பொருளோ எதுவும் திருட்டுப் போகவில்லை என கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் எழிலரசு தெரிவித்தார்