கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது வீரக்கல் கூத்தம்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர் கணபதி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி பாலமுருகன் என்ற மகன் மற்றும் பரிமளா என்ற மருமகள் உள்ளனர்.இந்நிலையில் கணபதியின் தந்தை பழனிச்சாமி மற்றும் அவரது சகோதரர் கணேசன் .முருகன் நான்கு மேற்பட்ட உறவினர்கள் கணபதி இறந்தவுடன் கணபதியின் மனைவி மற்றும் மகன் பாலமுருகனுக்கு வீட்டையும் சொத்தையும் பிரித்து தர முடியாது என்று தொடர்ந்து மிரட்டி அடித்து வருவதாகவும் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் வந்து பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டனர் .
Next Story