2 வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி - பெண் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்பு பட்டியை சார்ந்தவர் புவனேஸ்வரி. இவர் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த போது தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் வந்திருந்தார். அங்கு வந்த அவர் திடீரென தன் கையில் இருந்த மண்ணெண்ணையை தன் மீதும் இரண்டு வயது பெண் குழந்தையின் மீதும் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். அங்கு இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்திய நிலையில் தன் மீதும் இரண்டு வயது சிறு குழந்தை மீதும் மண்ணெண்ணையை ஊற்றிய புவனேஸ்வரி மீது சூலக்கரை காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Next Story