அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அத்திக்கடவு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரி மார்ச் 1ல் கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம். அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பு கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. கூட்டத்தில அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இதன் முக்கிய நிகழ்வாக 2016 பிப்.8 இருந்து 12 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தையடுத்து, அன்றைய தமிழக அரசு ரு.3.27கோடி நிதி ஒதுக்கி திட்டத்தை தொடங்கியது. தற்போது பெருந்துறை முதல் காரமடை வரை 1045 குளம் குட்டைகள் நீர் விடப்பட்டு சோதனை வெற்றியடைந்துள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்தும் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆகவே விரைவில் இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் போராட்டக் குழுவின் கோரிக்கையான 1400 விடுபட்ட குளம் குட்டைகளையும் இத்திட்டத்துடன் இணைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்ச்1ம் தேதி காலை அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் அத்திக்கடவு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பங்கேற்றனர்.