வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

14அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 14அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை வட்டாசியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கிய சலுகைகளை அவரது மகன் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் நிரகரிப்பதாகவும், 1999ம் ஆண்டு வழங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த 08.03.2023 அன்று நிறுத்தப்பட்டது.அதனை திரும்ப வழங்கிட வேண்டியும். கடந்த 7வது ஊதியக்குழு மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ.2500 கடந்த 7 ஆண்டுகளாக பெற்று வந்ததை நிறுத்தம் செய்யப்பட்டதை திரும்ப வழங்கிட வேண்டியும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் D பிரிவில் இணைக்கவேண்டி 30 ஆண்டுகளாக வைத்துவரும் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டியும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் சேர்த்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக மறைந்த வருவாய் கிராம ஊழியர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வட்ட தலைவர் திருப்பதி வட்ட செயலாளர் செல்வம் பொருளாளர் மாரியப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் கலைவானன் மாவட்ட பொருளாளர் வேடி வட்ட துணை தலைவர் சக்திவேல் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story