காங்., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காங்., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவட்டாறு அருகே காங்., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவட்டாறு அருகே காங்., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை காட்டாத்துறை ஊராட்சி முழுவதும் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு நடை பயணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதையொட்டி ராஜேஷ்குமார் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள். திருவட்டாறு அருகே வெட்டுக்குழி பகுதியில் குவிந்தனர். தகவல் அறிந்ததும் தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று நடை பயணம் மேற்கொள்ள போலீசார் அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் குமார் எம்எல்ஏ கூறுகையில், ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் அரசாணை தொடர்பாக வரும் 22ஆம் தேதி நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஐ பெரியசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணலாம் என கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் நடைபயணத்தை கைவிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளம் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story