76 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

76 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆத்தூரில் எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதில், 76 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா உருவம் படைத்த கேக்கை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர கழகச் செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story