ஆத்தூர்: இரயிலில் பறக்கும் புழுதியால் பயணிகள் அவதி

ஆத்தூர்: இரயிலில் பறக்கும் புழுதியால் பயணிகள் அவதி

ரயிலுக்குள் புழுதி 

ஆத்தூர் வழியாக செல்லும் விரைவு ரயில்களில் சேலம்-விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக ரயில்களுக்குள் பறக்கும் புழுதியால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருதாச்சலம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் காலை மதியம் இரவு என ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிலையில் சேலத்தில் இருந்து ஆத்தூர் வரையில் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் அருகே ஜல்லி கற்கள் சீரமைக்கும் பணியில் ராட்சத வாகனத்தில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக சேலம் விருத்தாசலம் ஆத்தூர் வழியாக செல்லும் விரைவு ரயில்களில் உள்ளே புழுதி பறப்பதால் புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.புகைமண்டலம் போல் புழுதி சூழ்ந்து இருப்பதால் மூச்சு திணறல் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயணிகள் உள்ளாகும் நிலையில் ரயில் வரும் நேரத்தில் பணிகளை நிறுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story