சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் நிலங்களுக்கு இன்று ஏலம்

சிவன்மலை  சுப்பிரமணியசுவாமி கோவில் நிலங்களுக்கு இன்று ஏலம்

சிவன்மலை முருகன் கோவில் 

காங்கேயம் அருகே சிவன்மலை,அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு இன்று ஏலம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலானது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலராலும் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்களை தக்காராகவும் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திருக்கோயிலுக்கு முளையாம்பூண்டி, வண்ணாந்துறைப்புதூர், வெள்ளக்கோவில், கீரனூர், பாப்பினி, அவிநாசிபாளையம் புதூர், நால்ரோடு, தெற்கு அவிநாசிபாளையம், சிவன்மலை, ஊதியூர், காங்கேயம் ஆகிய கிராமங்களில் 131 ஏக்கர் 89 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் அனைத்தும் வருவாய்துறை ஆவணங்களின்படி திருக்கோயில் பெயரிலேயே உள்ளன. மேற்கண்ட நிலங்கள் அனைத்தும் திருக்கோயிலின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்டவை.

எனவே, இந்நிலங்களிலிருந்து வருவாய் ஈட்டும் வகையிலும், நிலங்களை பாதுகாத்திடும் வகையிலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிலங்கள் பொது ஏலத்தின் மூலம் ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்பட்டு குத்தகைதாரர்களால் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே எதிர்வரும் பசலி 1434 ஆண்டிற்கான பொது ஏலம் இன்று நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story