ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
சேலம் உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்கள் அறுவடை செய்த 3,027 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். ஒரு கிலோ கொப்பரை, 62 ரூபாய்,10 காசு முதல், 83 ரூபாய், 60 காசு வரை விலை போனது. இதன்மூலம், 2.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரம் கொப்பரை வரத்து, 1,268 கிலோ மட்டுமே இருந்தது. இந்த வாரம், 1,759 கிலோ அதிகரித்தது. மேலும் கடந்த வாரம் கொப்பரை கிலோ, 65 முதல், 84 ரூபாய் வரை விலைபோனது. இதனுடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் குறைந்தபட்ச விலையில் கொப்பரை கிலோவுக்கு, ரூ.3 சரிந்தது என, விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story