காவல்துறை வாகனங்கள் ஏலம்

காவல்துறை வாகனங்கள் ஏலம்

காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படுவதால் ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படுவதால் ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 6 இரு சக்கர வாகனங்கள் என 8 காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த ஏலமானது வருகின்ற 14.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 13.12.2023 அன்று காலை 08.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 14.12.2023 அன்று காலை 06.00 மணி முதல் 10.00 வரை ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் GST விற்பனை வரியுடன் சேர்த்து 14.12.2023 அன்று உடனே செலுத்திவிட வேண்டும் என எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story