கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் ஏலம் - ஆட்சியர்
மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவு செய்த அரசுத்துறை வாகனம் டிசம்பர் 7ம் தேதி அன்று மாலை 5.00 மணியளவில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையிடலாம். வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புபவர்கள் வருகின்ற டிசம்பர் 7ம் தேதி அன்று ஏல நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும், மேலும் பிணை வைப்புத்தொகை 2000 ரூபாய் தொகையாக செலுத்தி ஏலத்தில் கலந்துக்கொள்ளலாம். நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர் முன் பிணை வைப்புத்தொகை போக ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான GST 18 சதவீத தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் முடிவே இறுதியானதாகும். ஏலம் எடுத்தவர்கள் வாகன பதிவு புத்தகத்தினை தனது சொந்த செலவிலேயே மாற்றம் செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுப்பவர் தங்களுடைய தனி நபர் ஆதார் மற்றும் அவரின் சொந்த பெயரில் GST எண் வைத்திருத்தல் மிகவும் அவசியம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Next Story