பயன்பாட்டில் இல்லாத அரசு வாகனம் ஏலம் - ஆட்சியர் அறிவிப்பு

பயன்பாட்டில் இல்லாத அரசு வாகனம் ஏலம் - ஆட்சியர் அறிவிப்பு

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

நாகையில் பயன்பாட்டில் இல்லாத ஈர்ப்பு (ஜீப்)வாகன ஏலம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இவ்வலுவலகத்தின் ஈப்பு வாகனம் தற்போது பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. எனவே நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உள்ள ஈப்பு ஏலம் விடப்படவுள்ளது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் நுழைவு கட்டணம் மற்றும் வைப்பு தொகை மற்றும் முன்பணத் தொகையினை காசோலையாக அல்லது பணமாக செலுத்தி தங்கள் பெயர். ஜிஎஸ்டி, எண்; ஆகியவற்றை பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் ஏலம் எடுத்தவர்கள் அதற்குரிய தொகையை (ம) ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டும்.

ஏலம் நடைபெறும் நாள்: 12.07.2024 அன்று பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை இடம்: மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்மாவட்ட ஆட்சியரக வளாகம் நாகப்பட்டினம் தொடர்புக்கு: 9942110902 (மாவட்ட திட்ட அலுவலர் ) 6382260134 (கண்காணிப்பாளர் )

Tags

Next Story