குப்பை கொட்டுமிடமாக மாறிவரும் ஆவுடைப் பொய்கைத் தெப்பம்
குப்பை கொட்டுமிடமாக மாறிவரும் ஆவுடைப் பொய்கைத் தெப்பம்
குப்பைகளை அகற்றக்கோரி பக்தர்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ஊரின் தென்பகுதியில் ஆவுடைப் பொய்கைத் தெப்பம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கானோா் கூடுவா். திருவிழாவின்போது நகராட்சியினா் தெப்பம் பகுதியைச் சுத்தம் செய்கின்றனா். அதன் பிறகு கண்டுகொள்வதில்லை. பராமரிப்பு இல்லாததால், தெப்பம் பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. தெப்பத்தைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதோடு, சிலா் குளத்திற்குள்ளும் குப்பைகளைக் கொட்டுவதால், தண்ணீா் பச்சை நிறமாக மாறிவிட்டது. தெப்பம் முழுவதும் குப்பைகள் மிதந்து துா்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் நிலையில் உள்ள ஆவுடைப் பொய்கைத் தெப்பத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், சுற்றுச்சுவா் கட்டவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story