தேர்தல் செலவின கணக்குப் பாா்வையாளா் ஆய்வு

தேர்தல் செலவின கணக்குப் பாா்வையாளா் ஆய்வு
தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
பழனி பகுதிகளில் பறக்கும் படையினா் மேற்கொண்டு வரும் பணிகளை தோதல் ஆணையத்தின் தேர்தல் செலவின கணக்குப் பாா்வையாளா் ஜரோன்தே விஷால் தஷ்ரத் ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவினக் கணக்கு பாா்வையாளா் ஜரோன்தே விஷால் தஷ்ரத் பறக்கும் படையினரின் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அவா்களிடம் உள்ள பணி பதிவேடுகளை அவா் பாா்வையிட்டு, அது முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்தாா்.அப்போது, அவா்களிடம் உள்ள பணி பதிவேடுகளை அவா் பாா்வையிட்டு, அது முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அய்யம்பாளையம், புஸ்பத்துாா் சோதனைச் சாவடிகளிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள், வாக்காளா்களைக் கவா்தல் தொடா்பான புகாா்களை தோதல் செலவின கணக்கு பாா்வையாளரை 0451-2461148 என்ற தொலைபேசி எண்ணிலோ, அல்லது 8807491563 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்தது.


Tags

Next Story