யோகா செய்து அசத்திய ஆட்டிசம் குழந்தைகள்!

யோகா செய்து அசத்திய ஆட்டிசம் குழந்தைகள்!

ஆட்டிசம் குழந்தைகள்

காந்தியடிகள் வந்து சென்ற இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் யோகாசனம் செய்து அசத்த்தினர்.

கோவை காட்டூர் பகுதியில் டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் டிரீம்ஸ்பெஷல் ஸ்கூல் என்ற பெயரில் ஆட்டிசம் பாதிப்பால் சிந்தனை குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை ஜெயபிரபா என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி நடத்தி வருகிறார்.

இந்த பள்ளியில் சிந்தனை குறைபாடு குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போத்தனூரில் மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த தற்போதைய காந்தி மெமோரியல் அரங்கில் இந்த சிறப்பு பள்ளியில் யோகா பயின்ற 30க்கும் மேற்பட்ட சிந்தனை குறைபாடு கொண்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் பத்துக்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர்.

ஆசிரியர்கள் யோகா செய்வதை பார்த்து குழந்தைகள் யோகா செய்தது யோகாசனங்களை செய்தது வெகுவாகக் கவர்ந்தது.இதுகுறித்து சிந்தனை குறைபாடு கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பேசும்போது யோகா பயிற்சிகளின் மூலம் குழந்தைகள் மனதை ஒருநிலைப்படுத்த முடிவதாகவும் குழந்தைகளுடன் யோகா செய்தது தங்களுக்கு மன இறுக்கத்தை போக்கும் வகையில் அமைந்ததாக தெரிவித்தனர்.

Tags

Next Story