மத்தூர் வேளாண்மை துறை சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு

மத்தூர் வேளாண்மை துறை சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு

விழிப்புணரவு 

மத்தூர் வேளாண்மை துறை சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு

மத்தூர் வேளாண்மை துறை சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு. மத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு ஆட்டோ விளம்பரம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் ராபி பருவம் (2023 2024) பயிர் காப்பீடு செய்வதற்கான விவரங்களை விவசாயிகளிடம் நேரடியாக சென்று விவரங்களை அளிக்க கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் அறிவுத்தின்படி, கெண்டிகாம்பட்டி, ஒட்டப்பட்டி, சோனரஹல்லி, மத்தூர், மூக்கம்பட்டி, ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் வானதி தலைமையில் வேளாண்மை அலுவலர் நீலகண்டன், வேளாண்மை துணை அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் விவசாயிகளுக்கு துண்டு பிரசாரம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தசாமி, கல்பனா, உதவி ஏற்படுத்தினர். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தசாமி, கல்பனா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஹேமந்த் குமார். பயிர்மதிப்பிட்டு அலுவலர் இந்துமதி, மற்றும் IFFCOTOKIYO சதீஷ்குமார், அருள்முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினர் அதற்கு உண்டான பதில்களை விளக்கத்துடன் அளித்தனர்.



Tags

Next Story