ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

கோப்பு படம்

சாத்தான்குளம் அருகே பழுதான ஆட்டோவை திரும்ப பெற பணம் இல்லாததால் விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார் புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மகன் நமச்சிவாயம் (29). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இதில் ஆட்டோ பழுதானதால் அதனை பழுது நீக்க கடையில் கொடுத்துள்ளார். அதனை திரும்ப வாங்கி வர போதிய பணம் இல்லாமல் இருந்ததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரசு தந்தை சுயம்புலிங்கம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story