மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் மரணம்
ஆட்டோ டிரைவர் பலி
திருநெல்வேலி மாவட்டம்,முக்கூடல் பகுதியில் புதிய வீட்டின் கட்டிட பணியின் போது தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் மகாராஜன் (47). ஆட்டோ டிரைவரான இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். முதல் தள வேலை முடிந்த நிலையில் மாடியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மகாராஜனும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மகாராஜன் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.இதுகுறித்து முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story