ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து - சரிந்த குடலுடன் சிகிச்சைக்கு அனுமதி

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து - சரிந்த குடலுடன் சிகிச்சைக்கு அனுமதி
பைல் படம்
வெள்ளமடம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரிமாவட்டம் வெள்ளமடம் அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஜான்சன் (36). லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கிருஷ்ணன் (39) இவரும் லோடு ஆட்டோ ஓட்டுகிறார். இவர்கள் நண்பர்கள். அதே பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் தங்கராஜா (45) என்பவருக்கும் ஜான்சன் குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்தது. இது பற்றி தங்க ராஜா ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதுபோல் தங்கராஜாவுக்கும் கிருஷ்ணனுக்கும் தொழில் ரீதியாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்தும் தங்கராஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தங்கராஜா, சண்முகபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜான்சன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் தங்கராஜா இடம் தகராறு செய்து, தங்க ராஜாவை தாக்கியுள்ளனர். இருதரப்பினரும் மாறி மாறி தாக்கியதில் தங்கராஜா விலா பகுதியில் கத்தி குத்து விழுந்தது. அந்த கத்தியைப் பறித்த தங்கராஜா, ஜான்சன் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் குடல் வெளியே வந்த ஜான்சன் கீழே சரிந்தார். உடனடியாக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து தங்கராஜாவை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஜான்சனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story