காயத்ரி ரகுராமுக்கு தாமரை தந்த ஆட்டோ டிரைவர்

காயத்ரி ரகுராமுக்கு தாமரை தந்த ஆட்டோ டிரைவர்
காயத்திரி ரகுராமுக்கு தாமரை பூ கொடுத்த ஆட்டோ டிரைவர்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை காயத்ரி ரகுராமிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தாமரை பூவை வழங்கி பாஜகவிற்கு வாக்களிக்க சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கன்னியாகுமரியில் உள்ள கடை வீதிகள், பஜார் சாலைகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவிடம் சென்றார். அங்கிருந்த டிரைவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு நோட்டீஸை அளித்தார். அப்போது அந்த நபர் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என தாமரைப் பூவை நீட்டினார்.

அப்போது காயத்ரி, நான் பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். தற்போது அதிமுகவில் இருக்கிறேன். அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். மீண்டும் அந்த நபர் தாமரையை கொடுத்தார். இதனால் அவர் வாங்கிக் கொண்டார். பிறகு நோட்டீஸை, காயத்ரி நீட்டியபோது அவர் வாங்கிக் கொள்ளவில்லை. உடனே காயத்ரி, "நீங்கள் கொடுத்த போது நான் வாங்கிக் கொண்டேனே, நீங்களும் வாங்கிக்கணும்" என்றார். உடனே அந்த நபர் வாங்கிக் கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story