காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
கடந்த மாதம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ ஓட்டுனர் பிரதீப் என்பவர் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி வந்த வந்துள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், சாலையில் இருந்த பெண் மீது சேற்றை வாரி இறைத்தததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தது வந்து வழி மறித்த போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த நபர், தகாத வார்த்தைகளால் பேசியதோடு அல்லாமல் பிரதீப்பை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், ஆட்டோ ஓட்டுனரை தாக்கியவரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் மீது காவல்துறையினர் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில், பிரதீப் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டோன்மெண்ட் காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் ஜீவா மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்க திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டு காவல்நிலையம் முன்பு அமர்ந்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் கென்னடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கோரிக்கையை ஏற்று பொய் புகாரை உடனடியாக நிராகரிப்பதாகவும், ஆட்டோ ஓட்டுனர் பிரதீப் மீது தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து வருடத்தை கைவிட்ட மற்ற ஓட்டுநர்கள் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது