காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

மார்த்தாண்டம் காவல் நிலையத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மார்த்தாண்டம் காவல் நிலையத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம்த்தில் அமைந்துள்ள பொதுச் சந்தையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இனால் லாரி பேட்டையை மீன் கமிஷன் வியாபாரிகள், மீன் இறங்கு தளமாகவும், கமிஷன் கடையாகவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது மார்க்கெட் பணி நடைபெற்று வருவதால், லாரிப்பேட்டையை காய்கறி வியாபாரிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன் கமிஷன் வியாபாரிகளிடம், அந்த இடத்தை காய்கறி வியாபாரிகளிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.

அவர்கள் லாரிப்பேட்டையை காய்கறி வியாபாரிகளிடம் ஒப்படைக்க மறுத்ததை அடுத்து, நகராட்சி நிர்வாகம் லாரி பேட்டையை பூட்டு போட்டு பூட்டியது, இந்நிலையில் கமிஷன் வியாபாரிகள் மீன் லாரிகளை, மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் வரிசையாகநிறுத்தி உள்ளனர்.

இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, பொது மக்களுக்கு நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியவில்லை, மேலும் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்கவும் செல்ல முடியவில்லை, மார்க்கெட்டின் முன்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டுகளுகளை, மீன் லாறிகள் ஆக்கிரமித்துள்ளாது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி மார்த்தாண்டம் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story