எடப்பாடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

எடப்பாடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

ஆட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்தம்
எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே பயணிகள் ஆட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விபத்து என்ற பெயரால் ஓட்டுநர்கள் மீது 106 (1), 106 ( 2 ) விதியின்படி கொலை குற்றம் சுமத்தி 10 ஆண்டு சிறை தண்டனை, 7 லட்சம் அபராதம் என்ற கொடிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை குறைத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும், சுங்கச்சாவடி பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பயணிகள் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் 40 ஆட்டோக்கள் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டோவில் செல்லும் பயணிகள் அவசர வசதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags

Next Story