விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஆட்டோ பேரணி

விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றது.

விருதுநகரில் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர் கிங்டம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேரணியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் சமூக விருதுகள் குறித்து தகவல் கிடைத்தால் காவல்துறைக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது என்பது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார் மேலும் விபத்துகளை தவிர்க்க என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் பவித்ரா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இதந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், தலைக்கவசம் உயிர்கவசம், தலைக்கவசம் அணிவீர், உயிரிழப்த்தைத் தவிர்ப்பீர், உரிமம் வழங்க எட்டு போடு உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு இதுவே உனது உயிர் காப்பு,சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி ,மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்,போதையில் பயணம் பாதையில் மரணம் , சாலையில் போதை மரணத்தின் பாதை ,மிக வேகம் மிக நன்று, சாலையில் முந்தாதே வாழ்க்கையில் முந்து, உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது விருதுநகர் கருமாதி மடம் அருகில் ஆரம்பித்து, நகராட்சி அலுவலகம், தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் முடிவடைந்தது.

Tags

Next Story