18 இடங்களில் தானியங்கி மழை மானி 

18 இடங்களில் தானியங்கி மழை மானி 
மழைமானியை பார்வையிட்ட கலெக்டர்
கன்னியாகுமரியில் 18 இடங்களில் தானியங்கி மழை மானி  கலெக்டர் துவக்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் தர்மபுரம் வடக்கு வருவாய் கிராமம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளுர் பி கிராம நிர்வாக அலுவலகங்களின் அருகாமையில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழைகாலங்கள், காலநிலை மாற்றம், பேரிடர் அபாயங்களிலிருந்து பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கும் நடைபெற்று வருகிறது.

பணிகளை விரைந்து முடித்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கட்டடிடத்திலும், அழகிய பாண்டியபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அசம்பு பகுதியிலும் மயிலார் அரசு ரப்பர் கழகம் அருகிலும், சிவலோகம் (சிற்றார் 2) பொதுப்பணித்துறை அலுவலகம் உட்பட 9 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story