குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரம்
திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கன்னியாகுமரி சந்திப்பு உட்பட 25 ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் இயந்திரங்களை பொடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது ரயில்களில் பயணிகள் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் ரயில்வே துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் எடுத்தால்,கால விரயம் ஏற்படுகிறது.
இதனை தடுக்க ஆன்லைன் முன்பதிவு யூ டி எஸ் ஆப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஏடிவிஎம் (ஆட்டோமேட்டிக் டிக்கெட் வெண்டிங் மிசின்) இயந்திரங்களை நிறுவி அதன் வாயிலாக டிக்கெட் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை பெற முடியும். இதற்காக பணியாளர்களையும் நியமிக்கப்பட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமாரி, நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை மற்றும் பாரசாலை உள்ளிட்ட திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட 25 பிரதான ரயில் நிலையங்களில் இந்த இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.