அய்யப்பன் கோவில் ஆபரணபெட்டி ஊர்வலம்

அய்யப்பன் கோவில் ஆபரணபெட்டி ஊர்வலம்

ஆபரண பெட்டி ஊர்வலம் 

சேலம் , மேட்டுத்தெரு புலி குருசாமி குழு சார்பில் ஓம் ஸ்ரீஅய்யப்பா சேவா அறக்கட்டளை சார்பில் 16-வது ஆண்டு அய்யப்பன் கோவில் ஆபரணபெட்டி ஊர்வலம் நடைபெற்றது.

சேலம் , மேட்டுத்தெரு புலி குருசாமி குழு சார்பில் ஓம் ஸ்ரீஅய்யப்பா சேவா அறக்கட்டளை சார்பில் 16-வது ஆண்டு அய்யப்பன் கோவில் ஆபரணபெட்டி ஊர்வலம் நடந்தது. சேலம் நாராயணன்நகர் ஹவுசிங்போர்டு ஓம்சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அய்யப்பசாமிக்கு காலையில் அபிஷேகம், வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து மாலையில் சேலம் சித்திரக்கல் மாரியம்மன் கோவிலில் இருந்து அய்யப்பன் ஆபரணபெட்டி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஓம்சக்தி விநாயகர் கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு அய்யப்பன் சன்னதியில் அய்யப்பனுக்கு தங்க கவசம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு மகரஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு நெய் அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. ஆபரணபெட்டி ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜைகள் அனைத்தும் குருசாமி சக்திவேல் முன்னின்று நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஓம்ஸ்ரீ அய்யப்பா சேவா அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.

Tags

Next Story