ஆவியுர் கல்குவாரி வெடிவிபத்து - வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

ஆவியுர் கல்குவாரி வெடிவிபத்து - வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு 

காரியாபட்டி அருகே கல் குவாரியில் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டாவது நாளாக மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் உள்ள வெடி மருந்து குடோனில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.‌ இதனை அடுத்து அப்பகுதியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி எஞ்சியுள்ள வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.‌

மாலை வரை பணிகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி விபத்து ஏற்பட்ட வெடி மருந்தின் தன்மை குறித்தும் எஞ்சியுள்ள வெடி மருந்துகளை செயல் இழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமையில் வருவாய்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வெடி பொருட்கள் செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அந்த கல்குவாரிக்குள் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தவிர வேற யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

Tags

Next Story