அவ்வையார் விருது - விண்ணப்பிக்க விதிமுறைகள் வெளியீடு

அவ்வையார் விருது -  விண்ணப்பிக்க  விதிமுறைகள் வெளியீடு

ஒளவையார் விருது 

2024 ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழா 08.03.2024 ஆம் நாளன்று கொண்டாடும் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் 1. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

3. இணைப்பு படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் (தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலம்) 4. விண்ணப்பதாரர் பெண்ணின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Soft Copy and Hard Copy) । 5. விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet)-1 (தமிழ் 1 மற்றும் ஆங்கிலம்!) tong Passport Size Photo 6. மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரிய முறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம். தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சாரால் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியுடைய நபர்கள் திருவண்ணாமலை, மாவட்ட சமூகநல அலுவலத்தில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம்) விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.

Tags

Next Story