கலெக்டர், சப் கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விருது
இளம் வாக்காளர்களை அதிகபடியாகவாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த, மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விருது ஜனவரி 25ம் தேதி தமிழக ஆளுனர் வழங்க உள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஏற்கனவே மொத்த வாக்காளர்கள்: 5,62,499 நபர்கள், இருந்தனர். பின்னர். சிறப்பு சுருக்க திருத்த பணிகள், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மொத்த வாக்காளர்கள்: 5,71,748 நபர்கள் உள்ளனர். இதில் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளின் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்கள்: 9,249 நபர்கள் ஆகும், இதில் இளம் வாக்காளர்கள் 18 மற்றும் 19 வயதினர் 7,499 நபர்கள் உள்ளனார். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் சுமார் 80 சதவீதம்பேர் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
எனவே அதிக இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மற்றும் பெரம்பலூர் சார் ஆட்சியருமான கோகுல் ஆகியோர்க்கு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இந்த விருதினை ஜனவரி 25ம் தேதிதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர் வழங்க உள்ளார் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது