கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது

கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது
X

கல்லூரி விழா

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் மின்னணு தொழில் நிறுவனங்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் அங்கீகாரம் அளித்து கவுரவப்படுத்துவதற்காக இந்த விழா நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை நெட்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாலிங்கம் ராமசாமி, சென்னை இ-காம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நாலெஜ் மேலாண்மையின் தலைவர் அர்ச்சனா ராஜமாணிக்கம், சேலம் ஜே.எஸ்.டபிள்.யூ. ஸ்டீல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு தலைவர் அரிராஜ் மற்றும் உதவி பொது மேலாளர் முருகு தமிழ் பாலன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்த 500- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்த விழாவிற்கு நாலெட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அறக்கட்டளை செயலாளர் குமாரசாமி மற்றும் பொருளாளர் சுரேஷ்குமார் வாழ்த்தி பேசினார்கள். கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் சீனிவாசன் ேபசும் போது, ‘மிகச்சிறந்த வேலை வாய்ப்பை கல்லூரி வழங்கிக் கொண்டிருக்கின்றது’ என்றார். விழாவில், துணை முதல்வர் விசாகவேல் சாதனைகள் புரிந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டி பேசினார். நாலெட்ஜ் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், இயக்குனர்கள், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story