ஊராட்சி தலைவருக்கு விருது

புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அமைச்சர்கள் விருது வழங்கினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞரின் நூற்றாண்டையொட்டி பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 408 ஊராட்சிகளில் ஊட்டச்சத்து உறுதிசெய்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சூசை அந்தோணிக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான கேடயம் மற்றும் சான்றிதழ், ஊக்க தொகையாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். லால்குடி எம்.எல்.ஏ.சவுந்தரபாண்டி யன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எம். எல். ஏ.க்கள் ஸ்டா லின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல்சமது, மாவட்டவருவாய் அலுவலர் ராஜலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிர திநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
