பெண்கள் முன்னேற்ற சேவைக்கு விருது - ஆட்சியர் அறிவிப்பு
ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பங்களை தேர்வுக்குழு கூட்டம் மூலம் பரிசீலனை செய்து இவ்விருது வழங்குவதற்குரிய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) உள்ளது. தகுதி வாய்ந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தற்களது விவரங்களை இவ்விணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.06.2024 மாலை 5 மணி ஆகும். இவ்லிருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.