ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விருது வழங்கல்

ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விருது வழங்கல்

விருது வழங்கல் 

ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர்கள் ரீட்டா, சுகுணாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாபு அப்துல் சையத், வழக்கறிஞர் பிரபாவதி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன், உமா மகேஸ்வரி ஆகியோர் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முத்துலட்சுமி, தமயந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story