சங்கமம் கலைவிழாவில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு விருது

சங்கமம் கலைவிழாவில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு விருது

சங்கமம் கலைவிழாவில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு விருது

சங்கமம் கலைவிழாவில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை சேலம் மேயர், ஆணையாளர் வழங்கினர்.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'சேலம் சங்கமம் நம்ம ஊரு திருவிழா' என்ற தலைப்பில் கலைவிழா சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் 2 நாட்கள் நடந்தது. இதில் கிராமியம், ஆடல், பாடல் நிகழ்ச்சி, கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பம்மை சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த 30 கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் தலைமை தாங்கி 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, அருள் எம்.எல்.ஏ., துணை மேயர் சாரதாதேவி, சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் வரவேற்றார். முடிவில் உதவி இயக்குனர் நீலமேகம் நன்றி கூறினார்.

Tags

Next Story