மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளருக்கு விருது
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளருக்கு விருது
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற 16488 மாணவர்களில் UMIS (University Management Information System) தரவுகளின் படி 60 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். இப்பணியை ஒருங்கிணைத்து சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரன் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று வழங்கி,பாராட்டினார். உடன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .ஐ.ஜோதி சந்திரா மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை )செந்தில் ஆகியோர் உள்ளனர்.
Next Story