பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு
விவசாயிகளுக்கு பரிசு
மதுரையில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
தோட்டக்கலைத் துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிகளில் சிறந்து விளங்கும் முதல் பரிசு பெற்ற மேலூர் வட்டாரத்தை சேர்ந்த மாதவன் அவர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் பாராட்டு சான்றிதழ், இரண்டாம் பரிசு பெற்ற தே கல்லுப்பட்டி வட்டாரத்தை சேர்ந்த கோப்பு ராஜ் அவர்களுக்கு 10,000 மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உடன் இருந்தார்.
Next Story