செஞ்சியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பரிசு

செஞ்சியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பரிசு
செஞ்சியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பரிசு
செஞ்சியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஸ்ரீ தரணி இன்டர்நேஷனல் பள்ளியில் செஞ்சி மகாதேகா ஷிட்டோரியா கராத்தே பள்ளியின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக் கப்பட்டது. முதன்மை பயிற்சியாளர் மணி, சிறப்பு பயிற்சியாளர் ஆறுமுகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து இப்பயிற்சி முடித்த மாணவ, மாணவிக ளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி பள் ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மாஸ்டர் ஜெ.எஸ். கலைமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் பெல்ட் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

இதில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மோகன், முகமது அலி, வக்கீல் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளரும், வக்கீலுமான தண்டபாணி பாராட்டினார்.

Tags

Next Story