அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

விருது வழங்கல் 

சேலத்தில் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கப்பட்டது.

சேலம் மிட்டவுன் ஈவன்ட் நிறுவனமானது கல்வி மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு மிட்டவுன் வர்த்தக விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த விருது வழங்கும் விழாவில் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சேலம் மாநகரில் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விருதை ட்ரூ சாய் அமைப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் பாபு வழங்கினார். விருது பெற சிறந்த பங்களிப்பை ஆற்றிய துறையின் டீன் செந்தில்குமாரை, பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து டீன் செந்தில்குமார் கூறுகையில், எங்கள் நிறுவனம் சார்ந்த மேம்பாட்டுகளையும், புதிய முயற்சிகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் மையமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக கருத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது வழங்கப்பட்டதன் மூலம் கல்வி சார்ந்த புதிய தொழில்நுட்ப முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள உந்துதலாக இருக்கும் என்றார்

Tags

Next Story